Published : 13,Mar 2021 01:42 PM
சிவகார்த்திகேயனின் படத்துடன் மீண்டும் மோதும் சல்மான்கானின் ‘ராதே’!

இயக்குநர் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் நடித்துள்ள ‘ராதே’ வரும் மே 13 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகவிருக்கிறது. இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு தற்போது அறிவித்திருக்கிறது.
சல்மான்கான், திஷா பதானி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்டவர்கள் நடிக்கும் ’ராதே’ கடந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை அன்று வெளியாவதாக இருந்தது. ஆனால், மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கால் கடந்த ஆறு மாதமாக படபிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மத்திய அரசு
சினிமா ஷுட்டிங்கிற்கான விதிமுறைகளை தளர்த்தியபின் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இப்படத்தில், நடிகர் பரத் சல்மான் கானுக்கு வில்லனாக நடிக்கிறார்.
Eid ka commitment tha, Eid par hi aayenge kyun ki ek baar jo maine.......#RadheOn13thMay#2MonthsToRadhe@bindasbhidu@DishPatani@RandeepHooda@PDdancing@SKFilmsOfficial@ZeeStudios_ @SohailKhan@atulreellife@ReelLifeProdn@ZeeMusicCompanypic.twitter.com/mvBxUJPSFp
— Salman Khan (@BeingSalmanKhan) March 13, 2021
இந்நிலையில், இப்படம், ரம்ஜான் பண்டிகையையொட்டி வரும் மே 13 ஆம் தேதி முதல் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது என்று சல்மான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருகிறார். சல்மான்கான் தான் இப்படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ படமும் மே 13 ஆம் தேதி அன்றுதான் ரம்ஜான் பண்டிகையையொட்டி வெளியாகிறது. இதேபோல, ஏற்கனவே, கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ஹீரோ’ படத்துடன், சல்மான்கானின் ‘தபாங் 3’ ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.