[X] Close

டிடிவி.தினகரனுக்கு ஆதரவளித்த 3 அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு சீட் இல்லை..!

சுடச்சுட

3-MLAs-who-supported-TTV-Dhinakaran-have-no-seats----

டிடிவி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி,  விருத்தாச்சலம் கலைச்செல்வனுக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில்  வாய்ப்பு வழங்கப்படவில்லை.


Advertisement

அதிமுகவிலிருந்து டிடிவி.தினகரன் நீக்கப்பட்ட பிறகு அவருக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர், அதன்பின்னர் அவருக்கு  ஆதரவாக  சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் செயல்பட்டனர். ஆனால் அவர்கள் பின்னர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சிலிருந்து ஒதுங்கி இருந்த அதிமுக வேட்பாளர் நேர்காணலில் இடம்பெறாத சென்னை முன்னாள் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமிக்கு சைதாப்பேட்டை வேட்பாளராக வாய்ப்பு வழங்கி உள்ளது.


Advertisement

 


Advertisement

Advertisement
[X] Close