[X] Close

சீமான் மீது எந்த வருத்தமும் இல்லை : தனிக்கட்சி தொடங்கிய மன்சூர் அலிகான் பேட்டி

தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சி மீது இப்போதும் மதிப்பு உள்ளது, சீமான் மீது எந்த வருத்தமும் இல்லை. ஆனாலும் தனித்து தேர்தலை சந்திக்கவே கட்சி தொடங்கினேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்திருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் மீதும், சீமான் மீதும் எந்த கோபமும், வருத்தமும் இல்லை, நானும் அவரும் ஒரு கொள்கைக்காகவே பயணிக்கிறோம் என்று கூறி “தமிழ் தேசிய புலிகள் “ என்ற புதிய கட்சியை தொடங்கியிருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான். கடந்த சில வருடங்களாக நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டுவந்த அவர், 2019 நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்டார்.


Advertisement

Advertisement
[X] Close