மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நேற்று அமேசான் பிரைமில் வெளியான "திருஷ்யம் 2" தெலுங்கு மொழியில் ரீமேக் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் முதல் பாகத்தில் நடித்த நடிகர் வெங்கடேஷே கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீது ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியானது "திருஷ்யம்". ஒரு குடும்பம் சந்தர்ப்ப சூழ்நிலையால் தற்காப்புக்காக கொலை செய்துவிட்டு அதனை காவல்துறையிடமிருந்து சிக்காமல் தப்பிப்பதே "திருஷ்யம்" படத்தின் முக்கியமான கதையம்சம். சினிமாவின் 'கிரைம் த்ரில்லர்' கதையாக்கத்தில் உருவான இத்திரைப்படம் 2013 இல் மலையாள திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன்பின்பு இத்திரைப்படம் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிப்பெற்றது.
அதன்பின்பு 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் "திருஷ்யம் 2" அதே ஜீது ஜோசப் கை வண்ணத்தில் வெளியாகி இப்போது நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. மலையாளத்தில் வெளியான சிறந்த கிரைம் த்ரில்லர் திரைப்படம் இது என பலரும் கொண்டாடி வருகின்றனர். பொதுவாக முதல் பாகத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்படும் படங்கள் வெற்றிப்பெறுவது அரிது. ஆனால் மிகச்சிறந்த திரைக்கதை மூலமும் நேர்த்தியான இயக்கத்தின் மூலமாக திருஷ்யம் 2 வின் பெரு வெற்றியை சாத்தியமாக்கி இருக்கிறார் இயக்குநர் ஜீது ஜோசப்.
இந்நிலையில் திருஷ்யம் 2 தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. திருஷ்யம் முதல் பாகமும் தெலுங்கில் எடுக்கப்பட்டது. அதில் கதாநாயகனாக நடிகர் வெங்கடேஷ் நடித்திருந்தார். அதுவும் தெலுங்கில் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்போது திருஷ்யம் 2விலும் வெங்கடேஷ் நடிக்கிறார். இத்திரைப்படத்தை ஜீது ஜோசப்பே தெலுங்கிலும் இயக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Loading More post
இப்படியும் சிலர்.. மரிக்காத மனிதநேயமும், மனிதமும்.. நெகிழ்ச்சியான ட்வீட்டின் பின்னணி இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய விரைவில் வருகிறது அவசர சட்டம்?
திருநெல்வேலி: ஆட்டோ கவிழ்ந்து எல்கேஜி மாணவன் உயிரிழப்பு; 5 குழந்தைகள் காயம்
அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறாரா ஓபிஎஸ்?
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!