சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெறுவதாக இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நமன் ஓஜா (37) அறிவித்தார்.
2010-இல் முதன்முதலாக இந்திய அணிக்காக விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதித்தார் நமன் ஓஜா. மேலும் அவர் 2015-இல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். ஜிம்பாப்வேவுக்கு எதிராக இரண்டு டி20 ஆட்டங்களில் இந்திய அணிக்காக களமிறங்கியுள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் ரஞ்சிக் கோப்பையில் அவர் மொத்தம் 7,861 ரன்கள் குவித்துள்ளார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான், ஹைதராபாத், டெல்லி என மொத்தம் 113 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் ஓஜா.
ரஞ்சி கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த விக்கெட் கீப்பர் என்ற சாதனைக்கு இன்றும் சொந்தக்காரராக உள்ளார் நமன் ஓஜா. இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் "20 ஆண்டுகளாக உள்நாட்டிலும் இந்தியாவுக்காகவும் விளையாடி இருக்கிறேன். அடுத்தக்கட்டத்துக்கு நகர்வதற்கு இதுதான் சரியான தருணம் என்று நினைக்கிறேன்.அதனால் என்னுடைய ஓய்வை அறிவிக்கிறேன். என் வாழ்வின் நெடுந்தூர பயணம் இது, ஆனால் என் வாழ்வின் அற்புதமான நாள்கள் இவை."
"இத்தனை நாள்கள் எனக்கு உறுதுணையாக இருந்த இந்திய அணி, என்னுடைய பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள், மருத்துவர்கள். கேப்டன்கள். சக வீரர்கள் மற்றும் பிசிசிஐ, ஐபிஎல் அணிகளுக்கு என்னுடைய நன்றிகள். இனியும் நான் விளையாடுவதை தொடர்வேன். அது வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளாக இருக்கலாம். என் இலக்கை எட்ட நினைக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்" என நமன் ஓஜா தெரிவித்துள்ளார்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்