சென்னை: தொண்டரின் பெண் குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜயகாந்த்

சென்னை: தொண்டரின் பெண் குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜயகாந்த்
சென்னை:  தொண்டரின் பெண் குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜயகாந்த்

சென்னையில் பரப்புரை வாகனத்தில் இருந்தபடியே தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்களை சந்தித்தார்.

தேமுதிகவின் கொடி நாளை முன்னிட்டு அக்கட்சியின் அலுவலகத்தில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றினார். பின்னர், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயாகாந்த் ஆகியோர் பரப்புரை வாகனத்தில் இருந்தபடியே மக்களை சந்தித்தனர். அப்போது விஜயகாந்த் மக்களை பார்த்து கையசைத்தார். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவர் தனது பெண் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு விஜயகாந்திடம் கூறினார். உடனே தனது பெயரையும் மனைவி பிரேமலதா பெயரையும் இணைத்து ‘விஜயலதா’ என அக்குழந்தைக்கு பெயர் சூட்டினார் விஜயகாந்த்.

தொடர்ந்து மக்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “விரைவில் தமிழகம் முழுவதும் விஜயகாந்த் பரப்புரை மேற்கொள்வார்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com