Published : 18,Jul 2017 07:17 AM
பல சுவாரஸிய எமோஜிகளை வெளியிட்ட ஆப்பிள்

உலக எமோஜி தினத்தை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனம் புதிய வகை எமோஜிகளை உருவாக்கியுள்ளது.
இன்றைய டெக் உலகில் எமொஜிக்கள் இல்லாமல் இளைஞர்களின் ஒருநாள் பொழுது கூட கழியாது. வேகமான உலகில் தங்களின் உணர்ச்சிகளை எமோஜிக்களாக வெளிப்படுத்தும் போக்கு இளைஞர்களின் அன்றாட நடவடிக்கைகளில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. எமோஜிக்கள் எனப்படும் முகபாவனைகளை ஜப்பான் பொறியாளர்கள் கடந்த 1999 ஆம் ஆண்டு உருவாக்கினார். அது படிப்படியாக வளர்ந்து இன்று பல சுவாரசிய தகவல்களை உரையாடல் இல்லாத உணர்வுகளை எமோஜிகளால் சொல்லக்கூடிய அளவிற்கு ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது. உணர்வுகளை எமோஜியாய் வெளிபடுத்துவது சோம்பேறி தனமா அல்லது ட்ரெண்ட்டா என்பது பல இளைஞர்களுக்கு தெரியாது.
Photo courtesy: apple.com
உலக எமோஜி தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபாட், ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக் ஆகியவற்றில் பல புதிய எமோஜிகளின் வடிவங்களை அறிமுகபடுத்தியுள்ளது. புதிதாக வெளியிட்டுள்ள எமோஜியில் ஸ்கார்ஃப்புடன் பெண்ணின் உருவம், டைனோசர், வரிகுதிரை, சாண்ட்விச், தேங்காய், குழந்தையுடன் ஒரு தாய், யோகா செய்வது, பூதம், நட்சத்திரத் கண்களுடன் ஸ்மைலி, தலை வெடிக்கும் முகம் கொண்ட ஸ்மைலி போன்ற 12 வகையான வேடிக்கையான எமோஜிகளை அறிமுகம் செய்துள்ளது.