[X] Close

ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய சசிகலா!

தமிழ்நாடு

Sasikala-tribute-to-Jayalalithaa

பெங்களூருவில் இருந்து புறப்படும் முன்பு, அவர் தங்கி இருந்த விடுதியில் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை முழுமையாக நிறைவு செய்துள்ள சசிகலா இன்று பெங்களூருவிலிருந்து தமிழகம் திரும்புகிறார். தமிழகம் வருகை தரும் அவருக்கு தடபுடலாக வரவேற்பு அளித்து வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள். அமமுக மற்றும் அதிமுக கொடிகளை தாங்கியபடியும் அவர் தங்கியுள்ள பெங்களூரு ரிசார்டின் வாசலில் அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். வழி நெடுகிலும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வரவேற்பு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

image


Advertisement

முன்னதாக பெங்களூருவில் இருந்து புறப்படும் முன்பு, அவர் தங்கி இருந்த விடுதியில் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். டிடிவி தினகரனும் மலர் தூவி ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தினார்.


Advertisement

Advertisement
[X] Close