Published : 08,Feb 2021 07:46 AM

“அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா”-பெங்களூருவில் ஒலிக்கும் சசிகலா ஆதரவாளர்களின் குரல்!

Followers-and-Supporters-of-VK-Sasikala-thronged-Bengaluru-resort-where-their-leader-stays-and-raised-slogans-supporting-her

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை முழுமையாக நிறைவு செய்துள்ள சசிகலா இன்று பெங்களூருவிலிருந்து தமிழகம் திரும்ப உள்ளார். அவருக்கு தடபுடலாக வரவேற்பு அளிக்க தயார் நிலையில் உள்ளனர் அவரது ஆர்வலர்கள். அமமுக மற்றும் அதிமுக கொடிகளை தாங்கியபடியும் அவர் தங்கியுள்ள பெங்களூரு ரிசார்டின் வாசலில் அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். இன்னும் சில நிமிடங்களில் அவர் தமிழகத்திற்கு புறப்பட உள்ள நிலையில் “சின்னம்மா வாழ்க... அதிமுகவின் வாழ்நாள் பொதுச் செயலாளர் சசிகலா” என்ற கோஷம் பெங்களூரு சாலைகளில் எதிரொலித்து வருகிறது. மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் சிலர் கோஷங்களை எழுப்பினர்.

சென்னையில் அவருக்கு விழா ஒன்றும் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரது வருகை தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்