Published : 30,Jan 2021 12:15 PM

''குடும்பத்தில் ஒருவர் போராட்டத்திற்கு செல்லுங்கள்'' - பஞ்சாபில் ஒரு கிராம பஞ்சாயத்து ஆணை!

Virk-Khurd-gram-panchayat-in-Bathinda-decides-to-send-at-least-one-member-of-each-family-to-farmers-protest

பஞ்சாபில் உள்ள கிராமத்தில் வீட்டிற்கு ஒருவர் கண்டிப்பாக டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு செல்ல வேண்டுமென ஆணை பிறப்பித்துள்ளனர் கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்தவர்கள்

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் முடிவு எட்டப்படவில்லை. மழை, பனி,குளிர் என விவசாயிகள் போராட்டத்தை தொடர்கின்றனர். முக்கியமாக குடியரசுத் தினத்தன்று அறிவிக்கப்பட்ட டிராக்டர் பேரணியில் கலவரம், தள்ளுமுள்ளு, தடியடி ஏற்பட்டது. தற்போது அடுத்தக்கட்டத்தை நோக்கி போராட்டத்தை நகர்த்துகின்றனர் விவசாயிகள்.

image
இந்நிலையில் பஞ்சாபில் உள்ள கிராமத்தில் வீட்டிற்கு ஒருவர் கண்டிப்பாக டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு செல்ல வேண்டுமென ஆணை பிறப்பித்துள்ளனர் கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்தவர்கள்.

விர்க் குர்த் என்ற கிராமத்தில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவர் ஒருவாரகாலம் டெல்லி போராட்டத்திற்கு செல்ல வேண்டும். இல்லையென்றால் ரூ.1500 அபராதம் விதிக்கப்படும். அபராதத்தை செலுத்தவில்லை என்றால் அந்த குடும்பம் தள்ளிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை செய்தி நிறுவனமான ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்