
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாதிகள் 3 பேரை கைது
செய்யப்பட்டனர். இவர்களிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரும் மாநில போலீசாரும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாராமுல்லா
பகுதியில் சுற்றித் திரிந்த 3 இளைஞர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் இந்திய
பணத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், அவர்கள் 3 பேரும் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்றும், அவர்கள் அப்பாவி காஷ்மீர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பாகிஸ்தானுக்கு அனுப்பிவைத்து வருவது விசாரணையில் தெரியவந்தது. மேலும் கள்ள விசா மற்றும் பாஸ்போர்ட் மூலமாக அவர்களை பாகிஸ்தானுக்கும் இந்த இளைஞர்கள் அனுப்பி வைத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களால் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ள இளைஞர்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், அவர்களை மீட்கும் பணியிலும் தீவிரமாக இறங்கி வருகின்றனர்.