கே.ஜி.எஃப்-2 இன் பிரம்மாண்ட டீஸர், யாஷ் பிறந்தநாளுக்கு ஒருநாள் முன்பே வெளியாகி இருக்கிறது.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கன்னடத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது. அதனைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி அதிலும் வெற்றியை குவித்தது.
இந்த வெற்றியால் ’கேஜிஎஃப் 2’ படத்தின் ஷூட்டிங்கை உற்சாகமுடன் அறிவித்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிலும் ஈடுபட்டு வருகிறது படக்குழு. இதன் இரண்டாம் பாகத்தில் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ்,ரவீனா தண்டன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்நிலையில், கேஜிஎஃப் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்த நிலையில், அதன் டீஸர் யாஷ் பிறந்தநாளான ஜனவரி 8, காலை 10;18 மணிக்கு வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீல் நேற்று அறிவித்திருந்தார்.
ஆனால், இன்று இணையத்தில் டீஸரின் ஒரு பகுதி லீக் ஆன காரணத்தால், 8ஆம் தேதி வெளியாக இருந்த டீஸர் ஒருநாள் முன்பு இன்றே அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. முதல்பாகத்தால் உருவான எதிர்பார்ப்பை இரண்டாம் பாகமும் பூர்த்திசெய்யும் என்பதை டீஸரின் பிரம்மாண்டம் உணர்த்தும்வகையில் உள்ளது.
A promise was once made, that promise will be kept!https://t.co/3xoDtHZ0be
Wishing Rocking Star @TheNameIsYash a very Happy Birthday.#KGF2Teaser #HBDRockyBhai @VKiragandur @prashanth_neel @hombalefilms @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7 @BasrurRavi @bhuvangowda84 — Hombale Films (@hombalefilms) January 7, 2021
டீஸர் வெளியான 10 மணி நேரத்தில் 15 மில்லியன் பார்வையாளர்களை கேஜிஎஃப் 2 கடந்துள்ளது.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai