Published : 05,Jan 2021 05:57 PM
ஜன.29 முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29 ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 29 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் அமர்வு மார்ச் 8 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரையிலும் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.