[X] Close

சூர்யா தயாரிப்பில் சிறார் சினிமா: அருண் விஜய் மகன் அறிமுகம்!

சினிமா

Son-of-Arun-Vijay-to-star-in-Surya-produced-film-

சூர்யா தயாரிக்கும் குழந்தைகள் சம்மந்தப்பட்ட படத்தில் நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் நடிக்கவிருக்கிறார். இன்று தொடங்கியுள்ள படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன். அருண் விஜய்யும் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.  


Advertisement

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ’36 வயதினிலே’ படத்தை தனது ’2டி என்டர்டைன்மென்ட்’ மூலம் தயாரித்து தயாரிப்பாளராகவும் அறிமுகமானார் நடிகர் சூர்யா. அதனைத்தொடர்ந்து, ‘பசங்க 2’, ‘24’,  ’மகளிர் மட்டும்’, ’கடைக்குட்டி சிங்கம்’, ’ஜாக்பாட்’ ,‘உறியடி 2’, ’பொன்மகள் வந்தாள்’, ‘சூரரைப் போற்று’ உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார் சூர்யா.

image


Advertisement

இந்நிலையில், தற்போது குழந்தைகளை மையப்படுத்திய படத்தை தயாரிக்கவிருக்கிறார். ஏற்கெனவே, குழந்தைகளை மையப்படுத்திய ‘பசங்க 2’ படத்தை பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 image

மீண்டும்  குழந்தைகளை மையப்படுத்திய கதையை தயாரிக்கவிருக்கும் சூர்யாவின் படத்தில் தற்போது, நடிகர் விஜயகுமாரின் பேரனும் அருண் விஜய்யின் மகனுமான அர்னவ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். இதுகுறித்து, இன்று காலையில் ட்விட் செய்துள்ள அருண் விஜய், ”அடுத்தடுத்த தலைமுறைகள் சினிமாவில் நுழைவது சந்தோஷமாக உள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் சரோவ் சண்முகம் இயக்குகிறார்.


Advertisement

’குழந்தைகள் மையப்படுத்திய படமாக இருந்தாலும் அனைத்து வயதினரும் பார்க்கப்படும் படமாக இருக்கும். சிறுவனுக்கும் அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையேயான பாசப்பிணைப்புதான் கதை’ என்று சொல்லப்படுகிறது. மேலும், இப்படத்தில் அருண் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


Advertisement

Advertisement
[X] Close