புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு, மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கொடும்பாளூர் அருகே வடகாட்டுப்பட்டியில் உள்ள மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக கவிழ்ந்த விபத்தில் காரில் சென்ற 4 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சுயநினைவின்றி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் விபத்தில் உயிரிழந்தவர்கள் மதுரையைச் சேர்ந்த பைசல், ரிசாத் நிலக்கோட்டையை சேர்ந்த அபுபக்கர் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. மேலும் விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர் மதுரையைச் சேர்ந்த முகமது சபியுல்லா என்பதும் இவர்கள் நான்கு பேரும் திருச்சியில் உள்ள கே.கே நகர் பகுதிக்கு சென்றதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
Loading More post
தோனி, ரோகித், கோலி இல்லாத முதல் ஐபிஎல் பைனல்!
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி