[X] Close

ஆபத்தில் முடிந்த உல்லாச பயணம் - 8 பேரின் உடல்கள் மீட்பு

Nagpur-boat-accident-8-dead

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி பலியான 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 


Advertisement

நாக்பூர் அணைப்பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்பு இளைஞர்கள் 8 பேர், நேற்று முன்தினம் படகில் உல்லாசப் பயணம் மேற்கொண்டனர். இந்தப் படகில் படகோட்டிகள் 3 பேர் உட்பட மொத்தம் 11 பேர் இருந்த நிலையில், அனைவரும் சேர்ந்து செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது, பாரம் தாங்காமல் எதிர்பாராத விதமாக திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த மீட்பு குழுவினர் நீரில் முழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் சடலமாகவும், 3 பேர் உயிருடனும் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், மற்ற 7 பேரும் இன்று சடலமாக மீட்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து உயிர் பிழைத்தவர்களிடம் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement

Advertisement
[X] Close