[X] Close

அமெரிக்க கடற்படை விமானம் விபத்து - 12பேர் உடல் கண்டெடுப்பு

American-naval-flight-accident---12-body-recovered

அமெரிக்கவில் உள்ள மிசிசிப்பி மாநிலத்தில் கடற்படை விமானம் விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து 12 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 4பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகுிறது. 


Advertisement

அமெரிக்கவில் உள்ள மிசிசிப்பி மாநிலத்தில் கேசி-130 ரக கடற்படை விமானம் விபத்துள்ளானது. ஆறு ஒன்றின் கடற்கரையை ஒட்டிய டெல்டா பகுதியில் இந்த விபத்து
ஏற்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளான போது ஏற்பட்ட சத்தத்தை கேட்டு அருகில் வசிக்கும் மக்கள் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு பணியில் ஈடுபட்டனர். விமானம்
சுக்கு நூறாக சிதறி தீப்பற்றி எரிந்த நிலையில், அதில் பயணம் செய்த 16 பேரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டனர்.

விபத்து நடந்த இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சிதறிக்கிடந்த 12 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 4 பேரின் உடலை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள கடற்படை தலைமை, சிறந்த நிபுணர்களையும் அப்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close