Published : 10,Jul 2017 03:43 PM
அமைச்சர் படத்திற்கு வேப்பிலை அடித்துப் போராடிய விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் விவசாயிகள் சங்கத்தினர், அமைச்சர் கடம்பூர் ராஜூவின் உருவப்படத்திற்கு வேப்பிலை அடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயிர் காப்பீட்டுத் தொகையைத் தர வேண்டும், உடனடியாக வறட்சி நிவாரணத்தை வழங்க வேண்டும், விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் அப்போது வலியுறுத்தப்பட்டன. கோவில்பட்டி இ.எஸ்.ஐ மருந்தகம் அருகே தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் கடந்த 6 நாட்களாக நடத்தி வரும் காத்திருப்புப் போராட்டத்தில் இன்று அமைச்சர் படத்திற்கு வேப்பிலை அடித்தனர்.