பாஜகவின் முகமூடியாக செயல்படுவதில், எடப்பாடி பழனிசாமியோடு உள்ள கடுமையான போட்டியில், ஓ.பன்னீர்செல்வம் திமுகவை வீணாக வம்புக்கு இழுப்பதாக, மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எடப்பாடி தலைமையிலான அரசு, ஸ்டாலினுடன் ரகசியக் கூட்டணி வைத்திருப்பதாக ராமநாதபுரம் கூட்டத்தில் பன்னீர்செல்வம் பேசியதைச் சுட்டிக்காட்டினார். முதலமைச்சர் பதவி கிடைக்காது என்று தெரிந்தவுடன் கமிட்டி கலைப்பு, இணைப்பு கிடையாது என்று வெளியில் கூறிவிட்டு, திரைமறைவில் இன்னமும் இணைப்பதற்கு ஹோட்டல் ஹோட்டலாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்திவருபவர் பன்னீர்செல்வம். திமுகவுக்கு கிடைத்து வரும் மக்கள் ஆதரவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், தனது டெல்லி ஆசான்களின் வழிகாட்டுதல்படி கூறும் குற்றச்சாட்டு இவை. இல்லாத கூட்டணியை இருப்பது போல் சித்தரிக்க முயலும் பன்னீர்செல்வம் இதிலும் தோல்வியைத் தழுவுவார் என்பதில் சந்தேகமில்லை. உள்ளபடியே எடப்பாடி அரசு நீடிப்பதில் உடன்பாடில்லை என்று பன்னீர்செல்வம் நினைத்தால், அரசு மீது சட்டப்பேரவையில் குற்றச்சாட்டுகளை வைக்க அஞ்சுவது ஏன் என்றும், துணிச்சல் இருந்தால், பேரவையில் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கவாவது முன்வரட்டும் என ஸ்டாலின் கூறினார்.
Loading More post
தோனி, ரோகித், கோலி இல்லாத முதல் ஐபிஎல் பைனல்!
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி