Published : 07,Jul 2017 07:13 AM

சேஸிங் செஞ்சுரி: சச்சினை முந்தினார் கோலி

Virat-Kohli-breaks-another-Sachin-Tendulkar-record

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடந்தது.
இதில் இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் விராத் கோலி, 115 பந்துகளில் 111
ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. 

இதற்கிடையில், விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். சேசிங்கில் அதிக
சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் 17 சதம் அடித்து, முதலிடத்தில் இருந்தார். நேற்றைய
போட்டியில் அடித்த செஞ்சுரி மூலம், சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார் விராத் கோலி. அவர் சேசிங்கில் 18 செஞ்சுரிகளை அடித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்