ரன் சேர்க்க முடியாமல் களைத்து நின்ற தோனி, ஐஸ் பேக் வைத்துக் கொண்டு கீப்பிங் செய்த டிவில்லியர்ஸ் என அமீரகத்தின் வெப்பம் மூத்த வீரர்களை திணறடித்து வருகிறது. உடலில் இருந்து அதிகளவில் நீர் வெளியேறுவதால் எளிதில் டி-ஹைட்ரேட் ஆகி விடுகின்றனர் வீரர்கள்.
இளம் வீரர்களையும் விட்டுவைக்கவில்லை அமீரக அனல். பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இஷான் கிஷனும், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது படிக்கலும் அதிகளவில் வியர்வை வெளியேறி சோர்வடைந்தனர். மிரட்டலான ஃபார்மில் இருந்த இஷான் கிஷனை, சூப்பர் ஓவரில் களமிறக்காததற்கு ரோகித் சர்மா கூறிய காரணமும் சோர்வே.
ரசிகர்கள் தொலைக்காட்சி வாயிலாக பார்க்க வேண்டும் என்பதற்காக இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. ஆனால் அமீரக நேரப்படி மாலை 6 மணிக்கே போட்டிகள் துவங்கி விடுகின்றன. அமீரகத்தில் பொதுவாக இரவு 8 மணிக்கு மேலும் வெப்பத்தின் தகிப்பு அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது. மாலை நேரத்தை தாண்டி நடக்கும் போட்டிகளிலேயே வீரர்களுக்கு இந்த நிலை என்றால், சனி, ஞாயிறு நாட்களில் அமீரக நேரப்படி 2 மணிக்கே போட்டிகள் தொடங்குகின்றன. அப்போது வீரர்கள் படும் பாடு திண்டாட்டமே.
கொரோனா அச்சுறுத்தலில் இருந்து தப்ப போட்டிகள் அமீரக மண்ணிற்கு போட்டிகள் மாற்றப்பட்ட நிலையில், அனலின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர் வீரர்கள். விளையாட்டு வீரர்களின் உடல்நலனைப் பேணும் வகையில் உரிய நடவடிக்கைகளை பிசிசிஐ மேற்கொள்ள வேண்டும் என்பதே கிரிக்கெட்டை நேசிக்கும் ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்