Published : 06,Jul 2017 05:29 AM
‘புதுச்சேரியை விட்டு ஆளுநர் வெளியேற வேண்டும்’: கிரண் பேடிக்கு வலுக்கும் எதிர்ப்பு

மத்திய அரசு நியமித்த 3 பாஜக எம்எல்ஏக்களுக்கு ரகசியமாக பதவிப் பிரமாணம் செய்து வைத்ததைத் தொடர்ந்து, புதுச்சேரியில் கிரண் பேடிக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி இன்று டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்து புகார் தெரிவிக்க உள்ளார். இதற்காக அவர் டெல்லி சென்றுள்ளார். இதேபோன்று, துணை நிலை ஆளுநர் கிரண் பேடியும் டெல்லி செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் புதுச்சேரியை விட்டு கிரண் பேடி வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 8 ஆம் தேதி கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் 11 ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.