[X] Close

SRH VS DC : டாப் 10 தருணங்கள்

விளையாட்டு,ஐபிஎல் திருவிழா

SRH-VS-DC-TOP-10-MOMENTS-OF-THE-MATCH-11-IPL-2020

அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 11வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் டாப் 10 நிகழ்வுகளை காண்போம்.


Advertisement

 image

1. நிதானமாக ஆடிய வார்னர் - பேர்ஸ்டோ


Advertisement

ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான வார்னரும், பேர்ஸ்டோவும் அதிரடி தொடக்கத்தை கொடுக்காமல், நிதான ஆட்டத்தை கையில் எடுத்தனர். 77 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் அது அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்தது.

image

2. தட்டி தட்டி ஆடிய பேர்ஸ்டோவ்


Advertisement

20 கிரிக்கெட்டில் 137 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள ஜானி பேர்ஸ்டோவ், டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 48 பந்துகளில் 53 ரன்களை அடித்திருந்தார். படகு நகராமல் இருக்க நங்கூரம் போடுவது போல ஆங்கரிங் இன்னிங்ஸை டெலிவரி செய்திருந்தார் பேர்ஸ்டோவ். ஹைதராபாத் 162 ரன்களை எடுக்க பேர்ஸ்டோவின் ஆட்டம் மிகமுக்கியமாக அமைந்தது.

image

3. தொடக்க போட்டியிலே ஜொலித்த வில்லியம்சன்

பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுடன் முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் விளையாடாத வில்லியம்சன் டெல்லி உடனான ஆட்டத்தில் ஆடும் லெவனில் பங்கேற்றார்.
நான்காவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய வில்லியம்சன், பேர்ஸ்டோவ் மற்றும் வார்னரின் டீசெண்டான தொடக்கத்தை பயன்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கிளாஸிக் கிரிக்கெட்டிங் ஷார்ட்களை ஆடிய அவர் 26 பந்துகளில் 41 ரன்களை குவித்திருந்தார்.

image

4. ரிவ்யூவில் வீழ்ந்த வார்னர்

அமித் மிஸ்ரா வீசிய பத்தாவது ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்ற வார்னர் பந்தை மிஸ் செய்ய அதற்கு அவுட் என அப்பீல் செய்தனர் டெல்லி வீரர்கள். அம்பயர் அவுட் கொடுக்க மறுத்ததும் அதை எதிர்த்து ரிவ்யூ செய்தார் அமித் மிஸ்ரா.
அதில் ஸ்னிக்கோ மீட்டரில் சிக்கிய வார்னர் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

image

5. பவுலிங்கில் கலக்கிய ரபாடா

டெல்லி அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருபவர் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா. பஞ்சாப் அணியுடனான போட்டியின் சூப்பர் ஓவரில் வெறும் இரண்டு ரன்களை மட்டுமே கொடுத்த ரபாடா, சென்னை அணியுடனான ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த இடிப்பு இன்றைய ஆட்டத்திலும் எதிரொலிக்க ஹைதராபாத் அணிக்கு எதிராக நான்கு ஓவர்கள் வீசி 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்திருந்தார். இதில் பதினோரு டாட் பால்களும் அடங்கும்.

image
6. முதல் ஓவரிலேயே அவுட்டான பிருத்வி

சென்னைக்கு எதிராக சிறந்த தொடக்கத்தை கொடுத்த பிருத்வி இந்த ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே அவுட்டாகி வெளியேறினார். புவனேஷ்வார் குமார் வீசிய பேக் ஆப் தி லெந்த் டெலிவெரியில் வீழ்ந்தார் பிருத்வி, டெல்லிக்கும் ஒரு வீழ்ச்சியை கொடுத்துவிட்டுச் சென்றார்.

image

7. சுழலில் அசத்திய ரஷீத் கான்

அமீரக மைதானங்கள் மெல்லமாக சூழல் பந்து வீச்சு கை கொடுக்க ஆரம்பித்துள்ளன. அதை ஹைதராபாத்தின் சுழல் மன்னனான ரஷீத் கான் நிரூபித்துள்ளார். நான்கு ஓவர்களில் வெறும் 14 ரன்களை மட்டுமே கொடுத்து டெல்லியின் மூன்று விக்கெட்டுகளை காலி செய்திருந்தார் ரஷீத். தவான், பண்ட் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் ரஷீத் சூழலில் சிக்கினர்.

image

8. ஸ்டாய்னிஸ் VS நடராஜன்

டெல்லி அணியின் பினிஷரான மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், சரிந்து கொண்டிருந்த டெல்லியை வெற்றி பாதைக்கு மீட்டெடுப்பார் என எதிர்பார்த்தபோது, தமிழக வீரர் நடராஜனின் யார்க்கர் டெலிவெரியில் LBW முறையில் 11 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். ரிவீவ் சென்றபோதும், அதிலும் அவர் விக்கெட் உறுதியானது ஸ்டொயினிஸை மட்டுமின்றி, டெல்லி அணியை ஏமாற்றத்தில் தள்ளியது.

image

9. ஹைதராபாத்துக்கு பலம் சேர்த்த புவனேஷ்வர் குமார்

ஹைதராபாத் அணியின் பலமே பந்து வீச்சு தான். அதற்கு மிகமுக்கிய காரணமாக இருப்பவர் புவனேஷ்வர் குமார். கடந்த இரண்டு போட்டிகளிலும் விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் இருந்தவர் இன்றைய ஆட்டத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிலும் முதல் ஓவரிலேயே பிருத்வி ஷாவை வீழ்த்தியிருந்தா புவி.
நான்கு ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் 13 டாட் பால்களும் அடங்கும்.

image

10. கேப்டன்சியில் கெத்து காட்டிய வார்னர்

பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமே இல்லாத டெல்லி அணியை திட்டம்போட்டு தூக்கினார் ஹைதராபாத் கேப்டன் வார்னர். சுழற்சி முறையில் தன் பவுலர்களை பந்து வீச சொல்லி அமர்க்களப்படுத்தினார். ஆரம்பம் முதலே ஃபீல்டிங்கில் துடிப்போடு செயல்பட்டு தன் அணி வீரர்களுக்கு பூஸ்ட்டும் கொடுத்தார் அவர். எந்த ஓவரிலும் ரன்களை லீக் செய்யாமல் டெல்லி மீது பிரஷர் போட்டு அதில் வென்று காட்டினார் வார்னர். இதன்மூலம் வெற்றி நடை போட்ட டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ஹைதராபாத்.


Advertisement

Advertisement
[X] Close