தொற்றுநோய் பரவலால் இந்தியாவில் மார்ச் 25ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்திய பொருளாதரம் மற்றும் மக்களின் நிலையைக் கருத்தில்கொண்டு அடுத்தடுத்து இதுவரை நான்கு ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஊரடங்கு செப்டம்பர் 25லிருந்து தொடங்குகிறது என ஆன்லைனில் ஸ்க்ரீன் ஷாட்டுடன் பெரிதும் பகிரப்பட்டு வந்த செய்தி போலியானது என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், நாட்டில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், திட்டமிடல் ஆணையத்துடன் இணைந்து மத்திய அரசு, 46 நாட்கள் தேசிய அளவிலான ஊரடங்கை செப்டம்பர் 25ஆம் தேதியிலிருந்து அமல்படுத்த உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தவிர மற்ற அனைத்துக்கும் தடைவிதிக்க என்.டி.எம்.ஏ முன்கூட்டியே திட்டமிட உள்துறை அமைச்சகத்தை வலியுறுத்துவதாக தெரிவித்திருந்தது.
இந்த அறிக்கை முற்றிலும் போலியானது என பத்திரிகை தகவல் பணியகம்(Press Information Bureau) மறுத்துள்ளது. மேலும் ஊரடங்கை அமல்படுத்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மத்திய அரசை எந்தவிதத்திலும் வலியுறுத்தவில்லை எனவும் பிஐபி தெரிவித்துள்ளது.
உலகிலேயே இரண்டாவது அதிகம் பாதித்த நாடாக இந்தியா உள்ளது. இதுவரை 48 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் சுமார் 90 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்திய பொருளாதாரத்தைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஊரடங்கை தளர்த்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை அனைத்து பாதுகாப்புகளுடனும் மக்கள் இயங்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!