Published : 09,Sep 2020 07:54 AM

"கமலா ஹாரிஸ் வெற்றிப் பெற்றால் அமெரிக்காவுக்கே அவமானம்"-அதிபர் ட்ரம்ப் !

Insult-to-US-if-she-becomes-president-Trump-sharpens-attack-at-Kamala-Harris

துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிப் பெற்றால் அது அமெரிக்காவுக்கே மிகப்பெரிய அவமானம் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ் வெற்றிபெறும் பட்சத்தில், அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர், முதல் கருப்பின பெண் துணை அதிபர், முதல் தெற்காசிய வம்சாவளி பெண் துணை அதிபர், முதல் இந்திய வம்சாவளி பெண் துணை அதிபர், முதல் தமிழ் வம்சாவளி பெண் துணை அதிபர் என பல புதிய சாதனைகளை பதிவு செய்வார்.

image

இந்நிலை கமலா ஹாரிஸ் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ட்ரம்ப் "மக்கள் அவரை விரும்பவில்லை. யாருக்கும் அவரை பிடிக்கவில்லை. அவரால் ஒருபோதும் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக ஆக முடியாது. அப்படி ஆகிவிட்டால் அது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அவமானமாக அமையும். கமலாவின் செல்வாக்கு குறைந்துக்கொண்டே வருவது எனக்கு நன்றாகத் தெரியும். அமெரிக்கர்களால் ஒருபோதும் அவரை ஏற்றுக்கொள்ள முடியாது. எனக்கு நிச்சயமாக தெரிந்துவிட்டது, தேர்தலில் அவர் தோற்றுவிடுவார்" என்றார்.

image

அண்மையில் கொரோனாவை கட்டுப்படுத்தாமல் தவறவிட்ட ட்ரம்ப் ,அதனை மறைப்பதற்காக தடுப்பு மருந்து குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார் என சாடியுள்ள கமலா ஹாரிஸ், நோய் பரவலை கட்டுப்படுத்த ட்ரம்பிடம் எவ்வித திட்டமிடலும் இல்லை என குற்றம்சாட்டியுள்ளார். 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது உண்மை தான் என கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார். இதற்கு பதலிளிக்கும் விதமாகவே அதிபர் ட்ரம்ப் இப்போது பேசியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்