[X] Close

வீட்டில் வேலையில்லாமல் இருக்க முடியாது;வேலையைத் தொடங்கலாமா? பிக்பாஸ் சீசன் 4 குறித்து கமல்

சினிமா

biggboss-promo-video-released-by-vijay-tv

பிக்பாஸ் சீசன் 4க்கான புரமோ வீடியோவை தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.


Advertisement

தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 3 சீசன் முடிவடைந்துள்ளது. இந்த மூன்று சீசன்களையும் நடிகரும் மக்கள் நீதிமய்ய தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில், பிக்பாஸ் 4க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த புரமோ வீடியோவை அந்த தனியார் தொலைக்காட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், “நலமா? அன்றாடம் நாம் ஒருவரையொருவர் எதார்த்தமாக கேட்டுக் கொள்ளும் கேள்வி இது. உலகெங்கிலும் பரவியிருக்கும் மருந்தே கண்டுபிடிக்கப்படாத ஒரு நோய். இந்த உலகமே ஒரு சின்ன கிராமம் என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறது. அமேசானில் தீப்பிடித்தால் இங்கு நமக்கு ஆக்சிஜன் குறைகிறது. நீங்களும் நானும் வேலைக்குப் போகவில்லை என்றால் நம்மை நம்பி இருக்கிற ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர், பஸ் ஓட்டுநர், அடிக்கடி சாப்பிடப் போகிற ஹோட்டல், டீக்கடை, மீன்கடைக்கார ஆயா, நமக்காக மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், இப்படி சங்கிலித் தொடராக நம்மை நம்பி இருப்பவர்கள் 5 மாத காலங்களாக வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.


Advertisement

நோய் ஆபத்தானது தான். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதற்காக வீட்டில் வேலையில்லாமல் இருக்க முடியாது. உலக சுகாதார அமைப்பு நமக்கு அறிவுறுத்தியபடி பாதுகாப்பாக இருப்போம். இதோ நான் வந்துட்டேன். அதேபோல் நீங்களும் உங்கள் வேலையைத் தொடங்குங்கள். நம்மை நம்பி இருப்பவர்களை வாழ வையுங்கள். நாமே முன்னெடுப்போம் ஒரு புதிய தொடக்கத்தை, புதிய எதார்த்தத்தை, புதிய வாழ்க்கையை. நாமே தீர்வு. சரி இப்போது வேலையை ஆரம்பிக்கலாமா? என்ன வேலை. பிக்பாஸ் சீசன் 4” என்று கமல் பேசுகிறார்.

 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close