[X] Close

‘டாப் ஆர்டரில் விளையாடவே தோனி விரும்பினார்’ ஆர்.பி.சிங் 

விளையாட்டு

Dhoni-wanted-to-play-in-top-order-SAYS-RP-Singh

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் ‘தோனி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடவே விரும்பினார்’ என தெரிவித்துள்ளார்.


Advertisement

image

அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக தோனி அறிவித்த நிலையில் ஆர்.பி.சிங் இதனை சொல்லியுள்ளார்.


Advertisement

‘நம் எல்லோருக்குமே தெரியும் தோனி சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த பினிஷர் என்று. ஆனால் தோனி இந்தியாவுக்காக டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடவே விரும்பினார். அதனை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்தும் உள்ளார். 

image

அவருக்கு நான்காவது பேட்ஸ்மேனாக விளையாட வேண்டுமென விருப்பம். ஆனால் அவர் பெரும்பாலும் 5 மற்றும் 6 வது பேட்ஸ்மேனாகவே விளையாடினார். அந்த இடத்தில் அவருக்கு நிகர் அவரே. 


Advertisement

நாங்கள் போன் செய்தால் எப்போதுமே எடுக்கமாட்டார். அது குறித்து அவரிடம் கேட்ட போது அவர் ஓய்வு பெற்றுவிட்டால் எங்களது போனை எடுப்பதாக உறுதி கொடுத்தார். இப்போது அதை செக் செய்து பார்க்க வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்கவும் : http://www.puthiyathalaimurai.com/newsview/78846/India-s-all-time-best-cricketer-is-not-DHONI-KOHLI-Sachin-SAYS-Sunil-Gavaskar


Advertisement

Advertisement
[X] Close