எஸ்.பி.பியை மீட்டெடுப்போம் - கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்கும் ரஜினி

எஸ்.பி.பியை மீட்டெடுப்போம் - கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்கும் ரஜினி
எஸ்.பி.பியை மீட்டெடுப்போம் - கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்கும் ரஜினி

எஸ்.பி.பி.க்காக நடைபெற உள்ள கூட்டுப் பிரார்த்தனையில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடலில் முன்னேற்றமில்லாமல் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் சந்திரசேகர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் எஸ்பிபிக்காக கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த கூட்டுப்பிரார்த்தனை இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த கூட்டுப்பி ரார்த்தையில் பங்கேற்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாடும் நிலா எழுந்து வா... கூட்டுப்பிரார்த்தனை செய்வோம். எஸ்பியை மீட்டெடுப்போம். இன்று மாலை 6 மணிமுதல் 6.05 வரை” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com