உத்தரபிரதேச மாநில கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பதினேழாவது மாடியில் குடியிருந்த 45 வயதான பெண் மாடியில் இருந்து குதித்து மரணம் அடைந்துள்ளார்.
இன்று காலை பிஸ்ராக் பகுதியில் அமைத்துள்ள அந்த குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளனர் காவலர்கள்.
கடந்த ஆண்டு தான் அந்த பெண்ணின் கணவர் உயிரிழந்துள்ளார். மீரட் மாவட்டத்தின் நீர்ப்பாசனத் துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வந்த அந்தபெண் தனது மகன் மற்றும் மருமகளுடன் அப்பார்ட்மென்டில் தங்கியிருந்ததாக தெரிவித்துள்ளனர் காவலர்கள்.
சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக்கான காரணம் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
பால்கனியில் இருந்து அந்த பெண் குதித்தபோது அவரது மகனும், மருமகளும் வீட்டில் இருந்தனர் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்