கொடைக்கானலில் பேரிக்காய். அதிக அளவில் கொத்துக் கொத்தாக காய்த்துள்ளது. வாங்க ஆள் இல்லாததால் பறிக்காமல் மரத்திலேயே விவசாயிகள் விட்டுவிடுகின்றனர்.
கொடைக்கானல் பள்ளங்கி அட்டுவம்பட்டி வில்பட்டி செம்பகனூர் போன்ற பகுதிகளில் காய்க்கக்கூடிய பேரிக்காய் அதிகமான மருத்துவ குணங்களைக் கொண்டது. ஜுன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அதிக அளவில் காய்க்கும் பேரிக்காய், கேரளா கர்நாடகா மாநிலம் மற்றும் சென்னையில் உள்ள கோயம்மேடு மார்க்கெட் உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.
கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனால் அதிக வியாபாரிகள் கூடும் கோயம்மேடு மார்க்கெட்டும் மூடப்பட்டுள்ளது. அதேபோல கொடைக்கானலுக்கு வர சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பேரிக்காய் காய்ப்பு அதிகமாக இருந்தாலும் வியாபாரம் இல்லை என்கின்றனர்.
தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்கக் கூடிய அளவுக்கு வருமானம் இல்லாமல் இருப்பதால் காய்களை பறிக்காமல் மரத்தில் அப்படியே விட்டுவிடுகிறோம் என்று கூறிய கொடைக்கானல் வில்பட்டியை சேர்ந்த விவசாயி தினகரன் தொடர்ந்து பேசினார்.
பேரிக்காய் சீசன் காலத்துல கிலோ எழுபது ரூபாயில் இருந்து என்பது ரூபாய் வரை போகும். அதேபோல சுற்றுலா வரும் பயணிகளுக்கு நூற்றியிருபது நூற்றி ஐம்பது என்று விற்பனை செய்வோம். அதனால் நல்ல வருமானம் கிடைக்கும். இந்த வருமானத்தைக் கொண்டு வாங்கிய கடனை அடைப்போம். ஆனால் இப்போது கொரோனா முடக்கத்தால் விவசாயமே ஒண்ணுமில்லாம போய்விட்டது. போட்ட முதலை எடுப்பதே கஷ்டமாக இருக்கிறது. விளைச்சல் அதிகமாக இருந்தாலும் கட்டாத விலைக்கு விற்கிறது. கிலோ பத்து பதினைந்துக்கு போட்டால் எப்படி கட்டுபடியாகும். காய் பறிக்கிற கூலி கூட கையை பிடிக்கிறது.
ஏற்கெனவே சுற்றுலா பயணிகளை நம்பி வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கிற கொடைக்கானல் மக்களோட வாழ்வாதாரமே கேள்விக்குறியாக இருக்கிறது. இதுல விவசாயமும் இப்படியே போனால் எங்கபாடு ரொம்ப திண்டாட்டம்தான். இப்ப அடிக்கிற ஆடிகாத்துல மரத்துல இருக்குற காயும் கொட்டிவிடுகிறது. அதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம்தான் என்றார் விவசாயி தினகரன்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!