[X] Close

பேரறிவாளனுக்கு சட்டப்படி பரோல் கேட்கிறோம்: அற்புதம்மாள் பேட்டி

Arputhamal-press-meet-about-perarivalan

26 ஆண்டுகள் கழித்து சட்டப்படியும், நியாப்படியும் பரோல் கேட்பதாக பேரறிவாளன் தாயர் அற்புதம்மாள் தெரிவித்தார்.


Advertisement

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பல கால கட்டத்தில் பேரறிவாளன் விடுதலை தொடர்பான விஷயத்தை பல பேர் கையில் எடுத்தனர். இப்போது தமிமூன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் சட்டப்பேரவையில் பேசுகிறார்கள். இதற்காக அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு பக்கபலமாக இருக்கும் ஊடகங்களுக்கும் நன்றி.

ஜெயலலிதா உயிரோடு இருந்த போது 7 பேர் விடுதலைக்காக முயற்சி எடுத்தார். அப்போது எதனால் அது தடைபட்டதென்று உங்களுக்கே தெரியும். ஆனால் இப்போது எனது கணவரின் உடல்நிலை சரியில்லாததல் உடனடியாக பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என கேட்கிறேன். பரோல் கொடுப்பது மாநில அரசின் உரிமை என கடைசி வரை போராடினார் ஜெயலலிதா. உச்சநீதிமன்றத்தையும் கூட அவர் நாடினார். ஆக பரோல் கொடுப்பது என்பது மாநில அரசின் உரிமை என்பதை முதலமைச்சர் பழனிசாமி கையில் எடுத்து உடடினயாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Advertisement

இப்போ அனுப்புறேன் எனக் கூட்டிக் கொண்டு சென்றார்கள். ஆனால் 26 வருடமாக அவன் சிறையிலேயே இருக்கிறான். கொலைக்காரங்க. கொலைக்காரங்க.. எனச் சொல்லி 23 ஆண்டுகளாக இந்த வழக்கு பற்றி தமிழகத்தில் யாரும் பேசவில்லை. ஆனால் திருவாளர்கள் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அங்கீகாரம் கொடுத்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா இறந்தது எனக்கு மிகப்பெரிய இழப்பு. ஜெயலலிதா பெயரை சொல்லி ஆட்சி செய்யும் இந்த அரசு அவர் வழியில் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.

வயதான காலத்தில் நாங்கள் கேட்பதெல்லாம், கொஞ்ச காலம் என் மகனோடு வாழ வேண்டும் என்பதுதான். 26 வருடம் கழித்து நியாயப்படியும், சட்டப்படியும் பரோல் கேட்கிறோம். சிபிஐ வழக்கு என்பதால் பரோல் மறுக்கப்படுவதாக காரணம் சொல்கிறார்கள். ஆனால் இது தவறு. இந்தியாவில் பல மாநிலங்களில் சிபிஐ வழக்குகளில் பரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது" என்றார்.


Advertisement

Advertisement
[X] Close