Published : 23,Jun 2017 08:35 AM
ஐயோ அது என் சொந்தக்காரர் இல்லை: ஜீவிதா மறுப்பு

செல்லாத நோட்டுகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் எனது உறவினர் இல்லை என்று நடிகை ஜீவிதா கூறியுள்ளார்.
ஏழு கோடி ரூபாய் அளவுக்கு, 500 மற்றும் 1,000 ரூபாய் செல்லாத நோட்டுக்களை ஐதராபாத்தில் போலீசார் நேற்று முன் தினம் கைப்பற்றினர். ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள பிரசாந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து இந்த நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக சீனிவாச ராவ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் முன்னாள் ஹீரோயின் ஜீவிதாவுக்கு உறவினர் என்றும் கூறப்பட்டது. இதுபற்றி செய்திகளும் வெளியாயின.
இந்நிலையில் இதுபற்றி விளக்கம் அளித்த ஜீவிதா, ’தேவையில்லாமல் இந்த விவகாரத்தில் என் பெயர் அடிபடுகிறது. சீனிவாச ராவுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை. அவர் யாரென்றே தெரியாது. அவர் என் உறவினர் இல்லை’ என்று கூறியுள்ளார்.