மகளுக்கு பீஸ் கட்ட பணமில்லாததால் கோயிலுக்கு பிரசாதம் செய்து கொடுப்பவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மைசூர் அருகிலுள்ள பிருந்தாவன் லே அவுட்டில் பிள்ளையார் கோயில் ஒன்று உள்ளது. இதன் அருகில் வசித்து வந்தவர் கங்காதர். கோயிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் வசித்துக்கொண்டு பிரசாதம் சமைத்துக் கொடுக்கும் வேலையை செய்து வந்தார். இவர் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவர் மகள் நேகா அருகிலுள்ள ஹெப்பாலில் தாத்தா பாட்டியுடன் தங்கி, ஜேஎஸ்எஸ் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாமாண்டு படித்து வந்தார். அவருக்கு கல்லூரிக் கட்டணம் ரூ.12, 500 கட்ட நேற்று கடைசி நாள். இதுபற்றி கடந்த புதன்கிழமை அப்பாவிடம் தெரிவித்திருந்தார் நேகா. அவர், அக்கம் பக்கத்தினர் மற்றும் தெரிந்தவர்களிடம் கடன் கேட்டுப் பார்த்தார்.
நேற்று காலை அப்பாவிடம் பணம் வாங்கிவிட்டு கல்லூரியில் கட்ட நினைத்தார் நேகா. அதற்காக அப்பாவைப் பார்க்கப் போனார். வீட்டின் கதவை திறந்தவருக்கு அதிர்ச்சி. தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார் அப்பா. கண்ணீர் விட்டு கதறினார் நேகா. அக்கம் பக்கத்தினர் வந்து விசாரித்தனர். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகளுக்கு பீஸ் கட்ட பணம் கிடைக்காததால் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!