Published : 13,Jun 2020 07:39 AM

தென்மேற்கு பருவமழை: ஒரு சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

Rain-on-Cards-for-Several-Districts-in-Tamil-Nadu

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருவதனால், தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

image

இது குறித்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நீலகிரி, திருநெல்வேலி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்திய கிழக்கு, மத்திய மேற்கு அரபிக்கடல், தென்மேற்கு அரபிக்கடல், கேரளா - கர்நாடகா கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா முடிவுகள் வராததால் சிகிச்சையில் தாமதம்.. உடனே சிகிச்சை மேற்கொள்ள மகன் வலியுறுத்தல்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்