[X] Close

500 ஏழைகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய ரஜினி மக்கள் மன்றம்

தமிழ்நாடு

rajini-fans-give-relief-items-for-500-needy-in-madurai

ரஜினி மக்கள் மன்றம் சார்பாக திருப்பரங்குன்றம் பகுதியில் 500 ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக தமிழ்நாட்டிலுள்ள மக்கள் பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.

image


Advertisement

இதனால் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு கொரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறன. அதன் ஒரு பகுதியாக ரஜினி மக்கள் மன்றம் சார்பாக திருப்பரங்குன்றம் பகுதியில் 5 இடங்களில் நடைபெற்ற நிவாரணப் பொருள் வழங்கும் நிகழ்ச்சியில் 500 ஏழை, எளிய மக்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.


Advertisement

Advertisement
[X] Close