
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51,89,488 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 20,78,561ஆக உயர்வு கண்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,34,092 ஆக உள்ளது.
வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவில் 16,20,767 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட 1 லட்சத்தை நெருங்குகிறது. தற்போதுவரை அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 96,314 ஆக உள்ளது.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13,967 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.