Published : 16,Jun 2017 11:11 AM

போலீஸ் மாணவர்கள் மோதல்.. கல்வீச்சு....முதல்வர் படுகாயம்

Pachiyaapa-college-principal-attacked-by-students

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் கல்வீச்சு நடந்தது. இதில் கல்லூரி முதல்வர் படுகாயமடைந்தார்.

இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய பச்சையப்பன் கல்லூரியின் கண்காணிப்பாளர் சேகர் கூறுகையில், விடுமுறைக்குப் பின்னர் கல்லூரி இன்று திறக்கப்பட்டது. அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய மாணவர்கள் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தை அடுத்து போலீசார் மீது மாணவர்கள் கற்களை வீசித் தாக்கினர். மாணவர்கள் மற்றும் போலீசார் இடையிலான பிரச்னையைத் தீர்க்க சம்பவ இடத்துக்கு வந்த கல்லூரி முதல்வர் காளிராஜ் மீது மாணவர்கள் வீசிய கல்பட்டது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், இந்த சம்பவத்தின் போது முதல்வர் காளிராஜின் காரும் சேதமடைந்தது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த முதல்வர் காளிராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்