திருப்பத்தூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை அமைச்சர் நிலோபர் கபில் சந்தித்த நிலையில் அதில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய வாணியம்பாடியை சேர்ந்த 8 பேரை மருத்துவமனையில் சேர்த்த அதிகாரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 52 பேரை தனியார் கல்லூரி மற்றும் தனியார் திருமண மண்டபங்களில் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். பரிசோதனை முடிவில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுடைய உறவினர்களான 12 பேருக்கு மட்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள 40 பேரை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் ஆறு நாட்கள் மட்டும் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.
ஏப்., 20-க்கு பிறகான தளர்வுகள்.. எவையெல்லாம் இயங்கலாம்..? எதற்கெல்லாம் தடை..?
இதனைத்தொடர்ந்து கடந்த 9-ஆம் தேதி அமைச்சர் நிலோபர் கபில், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து 40 பேரை குறைந்தபட்சம் 14 நாட்கள் கண்காணிப்பில் வைத்திருக்காமல் அனுப்பியது குறித்து கேள்வி எழுந்த நிலையில், அனைவருக்கும் கடந்த 11-ஆம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
கடந்த 13ஆம் தேதி வந்த ஆய்வின் முடிவில் அவர்களில் வாணியம்பாடி கோட்டை பகுதியை சேர்ந்த 48 வயது பெண்ணுக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைச்சர் நிலோபர் கபில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில், கொரோனா தொற்று ஏற்பட்ட பெண்ணை வழியனுப்பி வைத்த இரண்டு நாட்களுக்கு பிறகு, அதாவது கடந்த 11-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிலோபர் கபில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!