[X] Close

இந்தியா-தென்னாப்பிரிக்கா போட்டி: மழை வந்தால் யாருக்கு சாதகம்?

If-IndvsSA-match-washed-out----what-will-happen-

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முக்கியமான போட்டியில் இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகள் இன்று மோதுகின்றன. 

இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால், இருநாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் இடையில் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் நடந்து வரும் இந்த தொடரில் பல போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டன. இதனால் இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட கூடாது என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஒருவேளை இன்றைய போட்டி மழையால் முழுமையாக பாதிக்கப்பட்டால் அது, இந்திய அணிக்கு சாதகமாகவே இருக்கும். ஒரு போட்டியில் மட்டுமே வென்றிருந்தாலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் பி பிரிவில் இந்திய அணி முதலிடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டி மழையால் கைவிடப்படும் பட்சத்தில், 3 புள்ளிகளுடன் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும். அதேநேரம் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையிலான நாளைய போட்டியும் மழையால் கைவிடப்பட்டால் பி பிரிவிலிருந்து தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும். 
 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close