இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரெய்னாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா. தற்போது இவர் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் முடிந்தது. இதைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு கிரேசியா என பெயரிட்டனர்.
இந்நிலையில், தற்போது சுரேஷ் ரெய்னா - பிரியங்கா தம்பதியினருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சுரேஷ் ரெய்னா, “ஆச்சரியம், நம்பிக்கை, சாத்தியங்கள் மற்றும் சிறந்த உலகம் இவை அனைத்தும் தொடங்கிவிட்டன. எங்களின் மகனையும், கிரேசியாவின் தம்பியான ரியோ ரெய்னாவையும் வரவேற்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவன் எல்லைகளை கடந்து அனைவரது வாழ்விலும் அமைதி, புதுமைகளையும், வளங்களையும் கொண்டுவர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
சுரேஷ் ரெய்னாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்ததையொட்டி அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்