காதல் திருமண விவகாரத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் இளமதி பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததாக அவரது வழக்கறிஞர் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
சேலத்தில் கடத்தப்பட்டதாக புகாரளிக்கப்பட்ட இளம்பெண் இளமதி, சேலம் மேட்டூர் காவல்நிலையத்தில் இன்று ஆஜரானார். வழக்கறிஞர் சரவணன் என்பவருடன் அவர் ஆஜராகியுள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விசாரணையின்போது, பெற்றோருடன் செல்ல இளமதி விருப்பம் தெரிவித்திருப்பதாக அவரது வழக்கறிஞர் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, சேலம் மாவட்டத்தில் சாதிமறுப்பு காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணான இளமதி, கடத்தப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அவரை திருமணம் செய்துகொண்ட செல்வன் என்பவர் தாக்கப்பட்டு இளமதி காரில் கொண்டு செல்லப்பட்ட சிசிடிவி காட்சிகளும் கைப்பற்றப்பட்டன.
இதுதொடர்பாக 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் இளமதி கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், #இளமதி_எங்கே என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதுதொடர்பாக திமுக எம்பி செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
Loading More post
இபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு
`பாட்டு பாடியே கொலை மிரட்டல்’- சென்னை இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்
தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix