Published : 09,Mar 2020 06:52 AM

உற்சாகத்துடன் காட்டில் பயணிக்கும் ரஜினி - பியர் கிரில்ஸ் வெளியிட்ட வீடியோ!

Into-the-Wild-with-Bear-Grylls-and-Rajinikanth-trailer

தன்னுடன் ரஜினி கலந்துகொண்ட நிகழ்ச்சியின் முன்னோட்ட காட்சியை பியர் கிரில்ஸ் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

காட்டுக்குள் சென்று உயிர் வாழ்வது எப்படி என்பது குறித்த நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றபவர் பியர் கிரில்ஸ். இவரது நிகழ்ச்சியில் ஒபாமா, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

image

இந்நிலையில் Into The Wild With BearGrylls என்ற புதிய நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது. நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அது தொடர்பான அறிவிப்பை டிஸ்கவரி தொலைக்காட்சி வெளியிட்டது. அதன்படி, மார்ச் 23-ம் தேதி இரவு 8 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவித்தது.

image

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் முன்னோட்ட காட்சியை பியர் கிரில்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். மலையேறுவது, ஆற்றைக் கடப்பது என பல்வேறு செயல்களை பியர் கிரில்ஸுடன் இணைந்து ரஜினிகாந்த் செய்கிறார்.

இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் நிகழ்ச்சியைப் பார்க்க ஆவலாக உள்ளதாக பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்