[X] Close

ஜல்லிக்கட்டிற்காக விடிய விடிய போராடியவர்களுடன் துணை நின்ற ஊர்மக்கள்..!

Village-People-supports-for-Jallikattu-protester

ஜல்லிக்கட்டிற்காக அலங்காநல்லூரில் விடியவிடிய போராடியவர்களுடன் அவ்வூர் மக்களும் துணை நின்றுள்ளனர். காபி, பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களையும் போராட்டக்காரர்களுக்கு அவர்கள் வழங்கி உபசரித்தனர்.

தமிழ் மக்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்கக்கோரி அலங்காநல்லூரில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம் இன்று காலை வரை நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், பெண்கள் உள்பட 240 பேரை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, கொட்டும் பனியிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அவ்வூர் மக்களும் துணை நின்றுள்ளனர். அவர்களுக்காக காபி, டீ, தயார் செய்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அவர்கள் கொடுத்துள்ளனர். மேலும் உணவுப்பொருட்களையும் வழங்கி அவர்களுக்கு ஆதரவாக நின்றுள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close