Published : 07,Jun 2017 09:47 AM

அடிக்கடி தேர்தல் வருவது நல்லதல்ல: உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு...?

BJP-s-Pon-Radhakrishnan-about-Tn-politics-and-election

ஒரு மாநிலத்திற்கு அடிக்கடி தேர்தல் வருவது நல்லதல்ல என்றும், உள்ளாட்சி தேர்தல் வந்தால் இப்போது இருக்கின்ற அரசு தானாக விழுந்துவிடும் என்ற அச்சம் ஆளுங்கட்சிக்கு இருக்கிறது என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “ஒரு மாநிலத்திற்கு அடிக்கடி தேர்தல் வருவது நல்லதல்ல. இருக்கின்ற ஆட்சி இன்னும் திறமையாகவும், ஊழலற்ற திறமையான நிர்வாகத்தை மேற்கொள்ளக் கூடிய அனைத்து முயற்சிகளையும் அவர்கள் எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடந்தது என்று சொன்னால் இப்போது இருக்கின்ற ஆட்சி தானாக விழுந்துவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக இன்று செய்தியாளர்களிடையே பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “எடப்பாடி பழனிச்சாமி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இருக்கின்ற எம்.எல்.ஏ.க்களை பிடித்து வைத்துக் கொள்ளவில்லை என்றால் தேவையில்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டிவரும். அது யாருக்குமே நல்லதல்ல. இந்த நிலையற்ற தன்மையைப் பார்க்கும்போது முதலில் உள்ளாட்சித் தேர்தல் வருமா? அல்லது சட்டமன்றத் தேர்தல் வருமா? என்று தெரியவில்லை. ஏதோ ஒரு தேர்தல் சந்திக்கப் போகிறோம் என்பது மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது” என்று கூறியிருந்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்