வருமான வரிச்சோதனை குறித்து அஜித் கூறிய பழைய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக மாறியுள்ளது.
வருமான வரித்துறையினர் நீலாங்கரை அருகே உள்ள விஜய் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் ‘பிகில்’ படத் தயாரிப்பாளரின் ஏஜிஎஸ் நிறுவனத்திலும் பைனான்சியர் அன்புச் செழியன் வீட்டிலும் சோதனை நடத்தினர். மொத்தம் 38 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை கணக்கிற்குள் வராத 300 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் வீட்டில் நடத்தப்பட்டு வரும் வருமானவரிச் சோதனை சம்பந்தமாக அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #WeStandwithThalapathyVijay என ஹேஷ்டேக் போட்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வருமானவரிச் சோதனை குறித்து நடிகர் அஜித் தெரிவித்த பழைய விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களால் தற்போது வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.
ஷாருக்கானின் புதிய படத்தை இயக்குகிறார் அட்லீ?
அஜித், “வருமானவரிச் சோதனையில் காணாமல் போனது கிடைத்தது” என ஏற்கெனவே அளித்திருந்த பேட்டியை எடுத்து போட்டு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அஜித் அளித்த பழைய பேட்டியில் “வீட்டில் வைத்த பொருட்களில் பாதி எங்கே வைத்தோம் என்பது தெரியாமல் இருந்தது. வருமான வரிச் சோதனையில் காணாமல்போன பொருட்கள் அத்தனையும் மீண்டும் கிடைத்து விட்டன. இதனால் மகிழ்ச்சி அடைகிறேனே தவிர எனக்கு எந்தவித அதிர்ச்சியும் ஏற்படவில்லை. மேலும் நான் முறை தவறி எதையும் வீட்டில் வைத்திருக்கவில்லை” என்று கூறியுள்ளார். அந்தப் பேட்டிதான் இப்போது அவரது ரசிகர்களால் வைரலாக மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல் இன்னொரு பேட்டியில் அஜித், சுங்கவரி மற்றும் வரிகளை உயர்த்த வேண்டாம் என்றும் பெரிய நபர்கள் மற்றும் பிரபலங்களின் வீடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் அரசுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். பொதுநிதியை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் அதை திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் அது நாட்டின் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும் எனவும் அவர் பரிந்துரை செய்துள்ளார். அந்த இரண்டு பேட்டிகளும் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
Loading More post
இழந்து விடக்கூடாதது ஒன்றே ஒன்றுதான்! - #MorningMotivation #Inspiration
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix