Published : 31,May 2017 05:18 AM

திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு

One-more-case-on-Thriumurugan-gandhi

குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 21-ம் தேதி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை திருமுருகன் காந்தி ஒருங்கிணைத்து நடத்தினார். மெரினாவில் போராட்டம் நடத்த தடை இருக்கும் நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் 4 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.

இந்நிலையில் புழல் சிறையில் உள்ள திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை ஐஒசி அலுவலகத்தில் கல் வீசியது தொடர்பாக போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்