[X] Close

ரஜினிகாந்தை சந்தித்த கேரள மாற்றுத்திறனாளி பிரணவ்

Kerala-disabled-man-meets-Actor-Rajinikanth

மாற்றுத்திறனாளி பிரணவ் போயஸ் கார்டனிலுள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார்.


Advertisement

கேரள மாநிலத்தில் இருப்பவர் மாற்றுத்திறனாளி பிரணவ். இவருக்கு இரண்டு கைகளும் கிடையாது. ஆனால் தனது கால்களை கைகளைப் போல பயன்படுத்தும் பிரணவ், பல சாதனைகளை புரிந்துள்ளார். அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட வாக்கு இயந்திரத்தில் தனது கால்களை பயன்படுத்தி அவர் வாக்களித்தார். இவர் கேரள மாநில நிவாரணத்துக்கு நிதியளித்தார். அப்போது இவர் முதலமைச்சர் பிணராயி விஜயனுடன் எடுத்து கொண்ட செல்ஃபி மிகவும் பிரபலமானது. 


Advertisement

இந்நிலையில் தற்போது இவர் சென்னை போயஸ் கார்டனிலுள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். அப்போது பிரணவின்கால்களை தன்னுடைய கை விரல்களால் பிடித்து ரஜினி வரவேற்றார். அதன்பின்னர் பிரணவ் ரஜினியின் ஓவிய படத்தை அவருக்கு அளித்தார். அதன்பின்னர் ரஜினியும் அவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். 


Advertisement

Advertisement
[X] Close