[X] Close

ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஸ்பெயின்: கிளம்பினார் மோடி!

PM-Modi-Begins-4-Nation-Tour-Today-With-Visit-To-Germany

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு இன்று சுற்றுப் பயணம் கிளம்பினார்.

இந்தியாவின் பொருளாதார ரீதியிலான பங்கேற்புகளை அதிகரிக்கவும், நாட்டிற்கு அந்நிய முதலீடுகளைக் கொண்டுவரவும் 6 நாட்கள் அரசு முறை பயணமாக மோடி கிளம்பியுள்ளார். முதலில் ஜெர்மனி செல்லும் அவர், அந்நாட்டின் தலைவர் ஏஞ்சலா மார்க்கலை சந்தித்து சர்வதேச மற்றும் வட்டார ரீதியிலான வளர்ச்சி குறித்து விவாதிக்கிறார். இதில் இந்தியாவுக்கு ஜெர்மனிக்கும் இடையேயான அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார தொடர்புகள் குறித்து உரையாடுகிறார். மேலும் ஜெர்மனியின் அதிபர் ஃபிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மெரையும் சந்திக்கிறார்.

ஜெர்மனியிலிருந்து ஸ்பெயின் செல்லும் மோடி, அந்நாட்டு அதிபர் மரியானோ ரஜோயை சந்தித்து இருநாட்டு உறவுகள், சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு, பொருளாதாரத் தொடர்புகள் குறித்து விவாதிக்கிறார். மேலும், மேக் இன் இந்தியா திட்டத்துக்கான ஒத்துழைப்பையும் கேட்கிறார்.


Advertisement

பின்னர் ஸ்பெயினிலிருந்து ரஷ்யா செல்லும் மோடி மே 31 முதல் ஜூன் 2 வரை அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இரண்டாம் உலகப்போரின் போது 'லெனின் கிராடு யுத்த'த்தில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு செல்கிறார். அதன்பிறகு 18வது இந்திய - ரஷ்ய கூட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். பிறகு செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் உலகப் பொருளாதார மையத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் உரையாற்றுகிறார்.

ஜூன் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் பிரான்ஸ் செல்லும் மோடி, அங்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இம்மானுவேல் மாக்ரோனை சந்திக்கிறார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் மறு உருவாக்கம், பயங்கரவாத எதிர்ப்பு, காலநிலை மாற்றம் போன்ற பிரச்னைகள் குறித்து பேசுகிறார். மேலும், பாதுகாப்பு, விண்வெளி, அணு ஆற்றல், நகர வளர்ச்சி, ரயில்வே திட்டங்கள் ஆகியவற்றில் இந்தியாவும், பிரான்ஸும் இணைந்து பணியாற்றுவது குறித்து மோடி பேசுகிறார்.

Related Tags : germanynarendra modiModiGermanyFranceRussia

Advertisement

Advertisement
[X] Close