Published : 24,Nov 2019 08:32 AM

அஜித் பவாரிடமிருந்து பொறுப்பை பறித்தது சரியான முடிவு அல்ல -  பாஜக கருத்து

Ajit-Pawar-s-Removal-As-NCP-Legislature-Unit-Chief

மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து அஜித் பவாரை நீக்கியது சரியான முடிவு அல்ல என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.

அஜித் பவார், பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து துணை முதலமைச்சராக பதவியேற்றதை அடுத்து, அவர் தேசியவாத காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்திருக்கும் பாரதிய ஜனதா மூத்த தலைவர் ஆஷிஷ் ஷேலர், தேசியவாத காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் என்ற அடிப்படையில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை அஜித் பவார், ஆளுநரிடம் கொடுத்ததாகத் தெரிவித்தார். 

அஜித் பவார் வகித்து வந்த பதவியிலிருந்து அவரை நீக்கிவிட்டு ஜெயந்த் பாட்டீலை அப்பொறுப்புக்கு நியமித்தது செல்லாது என்றும் ஆஷிஷ் ஷேலர் கூறினார். தேசியவாத காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து அஜித் பவார் நீக்கப்பட்டதை ஆளுநர் கோஷ்யாரி சரிபார்த்த பின்னரே அதுபற்றிய முடிவுக்கு வர இயலும் என்று ஆஷிஷ் ஷேலர் தெரிவித்தார்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்