
ராஜஸ்தானில் பேருந்தும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.
ராஜஸ்தானில் உள்ள சிகார் மாவட்டத்தில் உள்ள கதுஷ்யாம்ஜி என்ற இடத்தில் அருகே நள்ளிரவில் பேருந்தும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர். தகவல் கிடைத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் என்ற விவரங்களை போலீசார் சேகரித்துவருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.